• Aug 14 2026

இலங்கையில் 91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் - 68 பேர் உயிரிழப்பு

Chithra / Aug 14th 2026, 1:06 pm
image


இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதன்படி, நேற்று (13) வரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


அத்துடன், டெங்கு நோய் காரணமாக இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.


இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


இதேவேளை, இம்மாதம் 13ஆம் திகதி வரையான முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்த மாகாணத்தில் 48,383 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


அதேபோன்று, தென் மாகாணத்தில் 13,479 பேரும், மத்திய மாகாணத்தில் 8,160 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 91 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் - 68 பேர் உயிரிழப்பு இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, நேற்று (13) வரையான காலப்பகுதியில் நாட்டில் மொத்தமாக 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.அத்துடன், டெங்கு நோய் காரணமாக இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இதேவேளை, இம்மாதம் 13ஆம் திகதி வரையான முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். அந்த மாகாணத்தில் 48,383 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அதேபோன்று, தென் மாகாணத்தில் 13,479 பேரும், மத்திய மாகாணத்தில் 8,160 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement