• Oct 17 2026

விரிவுரையாளர் தயாளினியின் மரணத்தில் நடந்தது என்ன? நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்கள்!

Chithra / Oct 16th 2026, 11:27 am
image


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் விரிவுரையாளரான மருத்துவர் தயாளினி திலீபனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள அவரது மகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


குறித்த பிணை மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்போது, மருத்துவர் தயாளினி திலீபனின் உயிரிழப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுருக்க முறையற்ற விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


அத்துடன், குறித்த வழக்குடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


குறிப்பாக, இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்களில் உயிரிழந்த மருத்துவர் தயாளினி திலீபனின் நகைகளும் உள்ளடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வழக்கு விசாரணைகள் நிறைவடையாததையும் முக்கிய சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெறாததையும் காரணங்களாக முன்வைத்து, சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு அரச தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.


இருதரப்பு விடயங்களையும் கருத்திற்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன், குறித்த பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

விரிவுரையாளர் தயாளினியின் மரணத்தில் நடந்தது என்ன நீதிமன்றத்தில் வெளியான முக்கிய தகவல்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் விரிவுரையாளரான மருத்துவர் தயாளினி திலீபனின் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள அவரது மகள் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த பிணை மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது, மருத்துவர் தயாளினி திலீபனின் உயிரிழப்பு தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுருக்க முறையற்ற விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அத்துடன், குறித்த வழக்குடன் தொடர்புடைய சான்றுப் பொருட்கள் தொடர்பான அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கையும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.குறிப்பாக, இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருட்களில் உயிரிழந்த மருத்துவர் தயாளினி திலீபனின் நகைகளும் உள்ளடங்குவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வழக்கு விசாரணைகள் நிறைவடையாததையும் முக்கிய சான்றுப் பொருட்கள் தொடர்பான அறிக்கை கிடைக்கப்பெறாததையும் காரணங்களாக முன்வைத்து, சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு அரச தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இருதரப்பு விடயங்களையும் கருத்திற்கொண்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்வரன், குறித்த பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement