• May 20 2026

வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்! - மஹிந்தவிற்கு அழைப்பில்லை

Chithra / May 19th 2026, 8:02 am
image

யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையிலுள்ள படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. 

 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.


இம்முறை நினைவு நிகழ்வில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன குறிப்பிட்டுள்ளார்.


இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் இராணுவத்தினரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 


5 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார். 


மக்களை திசை திருப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி மனோஜ் கமகே, வழக்கமாக ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்தார். 

வெற்றி விழா நினைவு நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில் - மஹிந்தவிற்கு அழைப்பில்லை யுத்த வெற்றியின் 17 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, “தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வு” இன்று (19) பத்தரமுல்லையிலுள்ள படை வீரர்கள் நினைவிடத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ நினைவிடத்திற்கு முன்பாக இந்த நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.இம்முறை நினைவு நிகழ்வில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் உறவினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹோன குறிப்பிட்டுள்ளார்.இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், தேசிய மாணவர் படையணி, ரணவிரு சேவா அதிகாரசபை மற்றும் இராணுவத்தினரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விசேட அழைப்பாளர்கள் உட்பட 2,769 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் தேசிய இராணுவ வெற்றி தின நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் கிடைக்கப்பெறவில்லை என அவரது ஊடகச் செயலாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். 5 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவிற்கு இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்திருந்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் மனோஜ் கமகே குறிப்பிட்டுள்ளார். மக்களை திசை திருப்பும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி மனோஜ் கமகே, வழக்கமாக ஜனாதிபதி செயலகத்திலிருந்தோ அல்லது பாதுகாப்பு அமைச்சிலிருந்தோ இந்த நினைவேந்தல் நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement