• Jul 14 2026

கட்டார் முன்னாள் தலைவர் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இரங்கல் தெரிவிக்க பிரதமர் கட்டார் விஜயம்

Chithra / Jul 14th 2026, 9:37 pm
image


கட்டார் நாட்டின் முன்னாள் தலைவர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகவும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டார் இராச்சியத்திற்கு பயணித்துள்ளார்.


பிரதமர் இன்று (14) மாலை கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, கட்டார் இராச்சியத்தின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து, இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.


இலங்கை மற்றும் கட்டார் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் டோஹா பயணமாகியுள்ளனர். 


இதன்போது, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியினை சந்தித்து இலங்கையின் அனுதாபத்தினைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். 


கட்டார் முன்னாள் தலைவர் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இரங்கல் தெரிவிக்க பிரதமர் கட்டார் விஜயம் கட்டார் நாட்டின் முன்னாள் தலைவர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காகவும், இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கட்டார் இராச்சியத்திற்கு பயணித்துள்ளார்.பிரதமர் இன்று (14) மாலை கட்டார் நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய, கட்டார் இராச்சியத்தின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து, இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளார்.இலங்கை மற்றும் கட்டார் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் டோஹா பயணமாகியுள்ளனர். இதன்போது, கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியினை சந்தித்து இலங்கையின் அனுதாபத்தினைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement