• May 18 2026

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம்!

shanu / Dec 24th 2025, 10:38 am
image

வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்று (24) காலை ஆரம்பமாகியுள்ளது.


இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் ஆரம்பமான நிலையில்  பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது.


குறிப்பாக "டித்வா" புயலால் ஏற்பட்ட பாதிப்புகப் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.


பிரதேச செயலர் அகிலனின் ஒருங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேசத்தின் தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேசத்தின் அரச நிர்வாக கட்டமைப்பின் பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் பொறுப்பு நிலை அதிகாரிகள் என மக்களின் நலன் மற்றும் பொறுப்புக்கூறும் தரப்பினர்  எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பம் வேலணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் தலைமையில் இன்று (24) காலை ஆரம்பமாகியுள்ளது.இன்று காலை 10 மணியளவில் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் கூட்டம் ஆரம்பமான நிலையில்  பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகின்றது.குறிப்பாக "டித்வா" புயலால் ஏற்பட்ட பாதிப்புகப் குறித்தும் மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.பிரதேச செயலர் அகிலனின் ஒருங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதேசத்தின் தவிசாளர் அசோக்குமார், பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேசத்தின் அரச நிர்வாக கட்டமைப்பின் பதவி நிலை அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் பொறுப்பு நிலை அதிகாரிகள் என மக்களின் நலன் மற்றும் பொறுப்புக்கூறும் தரப்பினர்  எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement