• May 17 2026

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் வெற்றிக்கிண்ணம் 2026 மாபெரும் உதைபந்தாட்டத் தொடர் ஆரம்பம்

dorin / May 16th 2026, 9:10 pm
image

வவுனியாவில் தவிசாளர் வெற்றிக்கிண்ணம் - 2026 மாபெரும் 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை முதல் மிக விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.

இவ் விளையாட்டு விழாவானது புதுக்குளம் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படவுள்ளன

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தைச் சேர்ந்த முன்னணி அணிகள் மற்றும் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த அணிகள் மோதவுள்ளன

வவுனியா மண்ணின் உதைபந்தாட்ட வீரர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் இந்தச் சுற்றுப்போட்டியைக் காண்பதற்கும், வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கும் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தவிசாளர் வெற்றிக்கிண்ணம் 2026 மாபெரும் உதைபந்தாட்டத் தொடர் ஆரம்பம் வவுனியாவில் தவிசாளர் வெற்றிக்கிண்ணம் - 2026 மாபெரும் 11 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை முதல் மிக விமர்சையாக ஆரம்பமாகவுள்ளது.இவ் விளையாட்டு விழாவானது புதுக்குளம் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது. வவுனியா மாவட்டத்தின் விளையாட்டுத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படவுள்ளனவவுனியா உதைபந்தாட்ட சங்கத்தைச் சேர்ந்த முன்னணி அணிகள் மற்றும் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த அணிகள் மோதவுள்ளனவவுனியா மண்ணின் உதைபந்தாட்ட வீரர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் இந்தச் சுற்றுப்போட்டியைக் காண்பதற்கும், வீரர்களை உற்சாகப்படுத்துவதற்கும் விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement