• Nov 09 2026

சம்மாந்துறைக்குப் பெருமை சேர்த்த இரு மாணவிகள்!

Ziya / Nov 9th 2026, 2:08 pm
image

சம்மாந்துறையைச் சேர்ந்த இரு மாணவிகள், மாவனல்லை ஆயிஷா சித்தீகா உயர்கல்விக் கல்லூரியின் (Ayeshah College of Higher Education – Mawanella) ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் தத்தமது தொகுதிகளின் சிறந்த மாணவிகளாக (Batch Toppers) தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.


குறித்த கல்லூரியின் 16ஆவது முதல் 21ஆவது தொகுதிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று (08.11.2026) கண்டி, பொல்கொல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இதன்போது, 16ஆவது தொகுதியைச் சேர்ந்த ஏ.எல். நதா ஸைனப் மற்றும் 19ஆவது தொகுதியைச் சேர்ந்த ஏ.எஸ். பாத்திமா ஹம்தா ஆகிய இருவரும் தத்தமது தொகுதிகளின் சிறந்த மாணவிகளுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.


கடந்த ஆறு தொகுதிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வில், வெவ்வேறு கல்வியாண்டுகளைச் சேர்ந்த இவ்விரு மாணவிகளும் தத்தமது தொகுதிகளில் முதலிடத்தைப் பெற்று விருதுகளை வென்றுள்ளமை சம்மாந்துறை மண்ணுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு கல்விப் பெருமையாகக் கருதப்படுகிறது.


இவ்விரு மாணவிகளும் தமது கற்கைநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


16ஆவது தொகுதியின் சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்ட நதா ஸைனப், மர்ஹூம் அல்-ஹாபிழ் எஸ்.எம். அஹமட் லெப்பை (இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்) மற்றும் ஹாஜியாணி ஆதம்பாவா சித்தி சல்மா ஆகியோரின் அன்பு மகளாவார்.


அதேவேளை, 19ஆவது தொகுதியின் சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்ட பாத்திமா ஹம்தா, அல்ஹாஜ் ஆதம்பாவா அப்துல் சலாம் (ஜனாதிபதி விளையாட்டு வளாகப் பொறுப்பதிகாரி – சம்மாந்துறை) மற்றும் ஹாஜியாணி யு.எல். உம்முல் உம்முனா ஆகியோரின் அன்பு மகளாவார்.


இச்சாதனையின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இவ்விரு மாணவிகளும் ஒரே குடும்ப உறவின் இரு கிளைகளைச் சேர்ந்தவர்கள் என்பதாகும். நதா ஸைனப், பாத்திமா ஹம்தாவின் தந்தையின் சகோதரியின் மகளாகவும், பாத்திமா ஹம்தா, நதா ஸைனப்பின் தாயின் சகோதரரின் மகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


கல்வித் துறையில் தமது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி, தொகுதி ரீதியான சிறந்த மாணவிகளுக்கான விருதுகளைப் பெற்றுள்ள இவ்விருவரினதும் சாதனை, சம்மாந்துறைப் பிரதேசத்தின் மாணவ சமூகத்திற்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

சம்மாந்துறைக்குப் பெருமை சேர்த்த இரு மாணவிகள் சம்மாந்துறையைச் சேர்ந்த இரு மாணவிகள், மாவனல்லை ஆயிஷா சித்தீகா உயர்கல்விக் கல்லூரியின் (Ayeshah College of Higher Education – Mawanella) ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் தத்தமது தொகுதிகளின் சிறந்த மாணவிகளாக (Batch Toppers) தெரிவு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளனர்.குறித்த கல்லூரியின் 16ஆவது முதல் 21ஆவது தொகுதிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று (08.11.2026) கண்டி, பொல்கொல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன்போது, 16ஆவது தொகுதியைச் சேர்ந்த ஏ.எல். நதா ஸைனப் மற்றும் 19ஆவது தொகுதியைச் சேர்ந்த ஏ.எஸ். பாத்திமா ஹம்தா ஆகிய இருவரும் தத்தமது தொகுதிகளின் சிறந்த மாணவிகளுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.கடந்த ஆறு தொகுதிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வில், வெவ்வேறு கல்வியாண்டுகளைச் சேர்ந்த இவ்விரு மாணவிகளும் தத்தமது தொகுதிகளில் முதலிடத்தைப் பெற்று விருதுகளை வென்றுள்ளமை சம்மாந்துறை மண்ணுக்குக் கிடைத்துள்ள மற்றுமொரு கல்விப் பெருமையாகக் கருதப்படுகிறது.இவ்விரு மாணவிகளும் தமது கற்கைநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் பின்னர் பல்கலைக்கழகக் கல்வியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.16ஆவது தொகுதியின் சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்ட நதா ஸைனப், மர்ஹூம் அல்-ஹாபிழ் எஸ்.எம். அஹமட் லெப்பை (இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்) மற்றும் ஹாஜியாணி ஆதம்பாவா சித்தி சல்மா ஆகியோரின் அன்பு மகளாவார்.அதேவேளை, 19ஆவது தொகுதியின் சிறந்த மாணவியாகத் தெரிவு செய்யப்பட்ட பாத்திமா ஹம்தா, அல்ஹாஜ் ஆதம்பாவா அப்துல் சலாம் (ஜனாதிபதி விளையாட்டு வளாகப் பொறுப்பதிகாரி – சம்மாந்துறை) மற்றும் ஹாஜியாணி யு.எல். உம்முல் உம்முனா ஆகியோரின் அன்பு மகளாவார்.இச்சாதனையின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், இவ்விரு மாணவிகளும் ஒரே குடும்ப உறவின் இரு கிளைகளைச் சேர்ந்தவர்கள் என்பதாகும். நதா ஸைனப், பாத்திமா ஹம்தாவின் தந்தையின் சகோதரியின் மகளாகவும், பாத்திமா ஹம்தா, நதா ஸைனப்பின் தாயின் சகோதரரின் மகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.கல்வித் துறையில் தமது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி, தொகுதி ரீதியான சிறந்த மாணவிகளுக்கான விருதுகளைப் பெற்றுள்ள இவ்விருவரினதும் சாதனை, சம்மாந்துறைப் பிரதேசத்தின் மாணவ சமூகத்திற்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement