• Oct 06 2026

மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் அதிரடி கைது

Aathira / Oct 6th 2026, 10:45 am
image

மிரிஹான பகுதியில் நேற்று சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இந்த சந்தேகநபரின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரும் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் அதிரடி கைது மிரிஹான பகுதியில் நேற்று சுற்றிவளைப்பொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (05) இரவு மிரிஹான பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சந்தேகநபரின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மற்றுமொரு நபரும் ஐஸ் போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement