• Oct 05 2026

வலையில் சிக்கிய அரிய உயிர் — தங்கள் வலையை வெட்டி காப்பாற்றிய மன்னார் மீனவர்கள்

Chithra / Oct 5th 2026, 3:41 pm
image


மன்னார் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் அரிய வகை கடல் ஆமை ஒன்று சிக்கியது.


வலையில் சிக்கிய ஆமையை கண்ட மீனவர்கள், கடும் போராட்டத்தின் மத்தியில் அதனை வலையுடன் தமது படகில் ஏற்றினர்.


ஆனால், ஆமையை மீட்க அவர்கள் எடுத்த முடிவு முக்கியமானதாக அமைந்தது.


ஆமைக்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையில், தமது பெறுமதியான மீன்பிடி வலையையே வெட்டி அதனை மீட்டனர்.


பின்னர் அந்த அரிய கடலாமையை மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.


கடல்வாழ் அரிய உயிரினத்தை பாதுகாக்கும் மன்னார் மீனவர்களின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


வலையில் சிக்கிய அரிய உயிர் — தங்கள் வலையை வெட்டி காப்பாற்றிய மன்னார் மீனவர்கள் மன்னார் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் அரிய வகை கடல் ஆமை ஒன்று சிக்கியது.வலையில் சிக்கிய ஆமையை கண்ட மீனவர்கள், கடும் போராட்டத்தின் மத்தியில் அதனை வலையுடன் தமது படகில் ஏற்றினர்.ஆனால், ஆமையை மீட்க அவர்கள் எடுத்த முடிவு முக்கியமானதாக அமைந்தது.ஆமைக்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையில், தமது பெறுமதியான மீன்பிடி வலையையே வெட்டி அதனை மீட்டனர்.பின்னர் அந்த அரிய கடலாமையை மீண்டும் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.கடல்வாழ் அரிய உயிரினத்தை பாதுகாக்கும் மன்னார் மீனவர்களின் இந்த மனிதநேய செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement