• Oct 05 2026

பால் ஏற்றிச் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதல் — ஹட்டனில் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

Chithra / Oct 5th 2026, 3:46 pm
image


ஹட்டன், டிக்கோயா,  புளியாவத்தை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மொனராகலை பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரவூர்தியும், பால் ஏற்றிச்  சென்ற கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன.


விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


அத்துடன், பால் ஏற்றிச் சென்ற  வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விபத்து காரணமாக குறித்த வீதியில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.


சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பால் ஏற்றிச் சென்ற வாகனம் நேருக்கு நேர் மோதல் — ஹட்டனில் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து ஹட்டன், டிக்கோயா,  புளியாவத்தை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொனராகலை பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரவூர்தியும், பால் ஏற்றிச்  சென்ற கெப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளன.விபத்தில் கெப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அத்துடன், பால் ஏற்றிச் சென்ற  வாகனம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து காரணமாக குறித்த வீதியில் சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement