மாத்தளை - கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞயிற்றுக்கிழமை (12) மாலை நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மூன்று இளைஞர்கள் தவறிவீழ்ந்துள்ளனர்.
இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற இளைஞர்களுக்கு நடந்த சோகம் - ஒருவர் பலி மாத்தளை - கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.நேற்று ஞயிற்றுக்கிழமை (12) மாலை நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற மூன்று இளைஞர்கள் தவறிவீழ்ந்துள்ளனர்.இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சடலம் மாத்தளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.