• Sep 07 2026

தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – பாம்பு கடித்து பலி

Chithra / Sep 6th 2026, 2:08 pm
image


புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.


இந்த சோகச் சம்பவம் நேற்று (05.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த பெண், பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாம்பு கடி, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் யானை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நட்டஈடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – பாம்பு கடித்து பலி புசல்லாவை, கலுகள்ள தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய பெண் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இந்த சோகச் சம்பவம் நேற்று (05.09.2026) காலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டிருந்த குறித்த பெண், பாம்பு கடிக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோதும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பாம்பு கடி, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல் மற்றும் யானை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உரிய நட்டஈடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்படுவதில்லை என தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement