நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இனப் பாகுபாடுகளைத் துறந்து ஒன்றிணைய வேண்டும்
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இனப் பாகுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு ஆசியுரை வழங்கிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
"பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு செழிப்பான மற்றும் பாக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என மனதாரப் பிரார்த்திக்கிறேன்.
வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அனைவரும் 'எமது நாடு' என்ற உணர்வுடன், முரண்பாடுகளைத் துறந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியும் என்பதை விசேடமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கை அனர்த்தங்களினால் வீழ்ச்சியடைந்த உலகின் ஏனைய நாடுகள் மீண்டெழுந்த விதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, இலங்கையர்களும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டுமென மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிளவுகளின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென, பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இனப் பாகுபாடுகளைத் துறந்து ஒன்றிணைய வேண்டும் - ஸ்ரீ ஞானரதன தேரர் நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் இனப் பாகுபாடுகளைத் துறந்து ஒன்றிணைய வேண்டும்வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இனப் பாகுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென, பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு ஆசியுரை வழங்கிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி வணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். "பிறந்துள்ள இந்தப் புத்தாண்டு செழிப்பான மற்றும் பாக்கியம் நிறைந்த ஆண்டாக அமையட்டும் என மனதாரப் பிரார்த்திக்கிறேன். வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அனைவரும் 'எமது நாடு' என்ற உணர்வுடன், முரண்பாடுகளைத் துறந்து ஒத்துழைப்புடன் செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியும் என்பதை விசேடமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் வீழ்ச்சியடைந்த உலகின் ஏனைய நாடுகள் மீண்டெழுந்த விதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, இலங்கையர்களும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைய வேண்டுமென மல்வத்து பீடத்தின் அநுநாயக்கர் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிளவுகளின்றி நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென, பிறந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.