• Apr 18 2026

பெரும்போக நெல் கொள்வனவுக்காக விசேட சலுகைக்கடன்

Chithra / Jan 1st 2026, 11:27 am
image

சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்று இன்று முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

தற்போதைய பெரும்போக பருவத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த கடன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு 7 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 

இவ்வாறாகப் பெறப்படும் கடன்தொகையை 180 நாட்களுக்குள் மீளச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

பெரும்போக நெல் கொள்வனவுக்காக விசேட சலுகைக்கடன் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சலுகை வட்டியிலான கடன் வழங்கும் திட்டமொன்று இன்று முதல் அமுலுக்கு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய பெரும்போக பருவத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த கடன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆண்டுக்கு 7 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபா வரை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறாகப் பெறப்படும் கடன்தொகையை 180 நாட்களுக்குள் மீளச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement