கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த விவசாயிகள், கடந்த காலங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகவும், அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே சில விவசாயிகளிடமிருந்து மாத்திரம் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
எனினும் தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், நெல்லுக்கான உத்தரவாத விலையையும் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தனியார் தரப்பினர் ஒரு மூட்டை நெல்லை 5,500 முதல் 6,200 ரூபாய் வரையான விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேவேளை, அரசாங்கத்தின் அறிவிப்பின்படி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல்லை 8,450 ரூபாய் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த நெல் கொள்வனவு நடவடிக்கை தொடர்ச்சியாக அனைத்து விவசாயிகளிடமிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த விவசாயிகள், உரிய நேரத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் அரசின் நெல் கொள்வனவு ஆரம்பம் – விவசாயிகள் வரவேற்பு கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடமாகாண பதில் முகாமையாளர் தவராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த விவசாயிகள், கடந்த காலங்களில் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை காணப்பட்டதாகவும், அறுவடை முடிந்து பல மாதங்களின் பின்னரே சில விவசாயிகளிடமிருந்து மாத்திரம் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.எனினும் தற்போதைய அரசாங்கம் அறுவடை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என அவர்கள் குறிப்பிட்டனர்.மேலும், நெல்லுக்கான உத்தரவாத விலையையும் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், தனியார் தரப்பினர் ஒரு மூட்டை நெல்லை 5,500 முதல் 6,200 ரூபாய் வரையான விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.அதேவேளை, அரசாங்கத்தின் அறிவிப்பின்படி விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஒரு மூட்டை நெல்லை 8,450 ரூபாய் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.இந்த நெல் கொள்வனவு நடவடிக்கை தொடர்ச்சியாக அனைத்து விவசாயிகளிடமிருந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்த விவசாயிகள், உரிய நேரத்தில் அரசாங்கம் நெல் கொள்வனவை ஆரம்பித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்தனர்.