நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (25) இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் 07 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதியில் நேற்று மாலை உழவு இயந்திரம் மோதி சிறுமி ஒருவர் படுகாயமடைந்தார். பின்னர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மாத்தளை – ரத்தோட்டை வீதியின் வேரகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை நோக்கி பயணித்த ஜீப் வண்டியொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய பெண்ணும், அதன் பின்னால் பயணித்த சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
புஞ்சி ரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துறைமுகப் பகுதியிலிருந்து இங்குறுகட நோக்கி பயணித்த டிப்பர் லொறிக்கு முன்னால், பாதசாரிகள் கடவை வழியாக வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார்.
பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே நாளில் மூன்று வீதி விபத்துக்கள் – சிறுமி உட்பட இரு பெண்கள் உயிரிழப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (25) இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் 07 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.அடம்பன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதியில் நேற்று மாலை உழவு இயந்திரம் மோதி சிறுமி ஒருவர் படுகாயமடைந்தார். பின்னர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 07 வயதுடைய சிறுமி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, மாத்தளை – ரத்தோட்டை வீதியின் வேரகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தளை நோக்கி பயணித்த ஜீப் வண்டியொன்று எதிர்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் முச்சக்கர வண்டியை செலுத்திய பெண்ணும், அதன் பின்னால் பயணித்த சிறுவனும் பலத்த காயமடைந்த நிலையில் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.புஞ்சி ரத்தோட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரத்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதற்கிடையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குறுகட சந்திக்கு அருகிலும் நேற்று விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.துறைமுகப் பகுதியிலிருந்து இங்குறுகட நோக்கி பயணித்த டிப்பர் லொறிக்கு முன்னால், பாதசாரிகள் கடவை வழியாக வீதியைக் கடக்க முயன்ற பெண் ஒருவர் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார்.பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் டிப்பர் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.