• Oct 16 2026

இலங்கைக்கு வந்த இத்தாலி நாட்டவருக்கு நேர்ந்த சோகம்! - கணநேரத்தில் நிகழ்ந்த துயரம்!

Chithra / Oct 15th 2026, 10:39 am
image


நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி பலத்த காயமடைந்த வெளிநாட்டவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதிய குறித்த வெளிநாட்டவர் பலத்த காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதனையடுத்து, வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதுடைய இத்தாலி நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கைக்கு வந்த இத்தாலி நாட்டவருக்கு நேர்ந்த சோகம் - கணநேரத்தில் நிகழ்ந்த துயரம் நீர்கொழும்பு, கட்டுவ ரயில் நிலையத்தில் ரயிலில் மோதி பலத்த காயமடைந்த வெளிநாட்டவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதிய குறித்த வெளிநாட்டவர் பலத்த காயமடைந்த நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து, வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதுடைய இத்தாலி நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement