• Oct 17 2026

உலகிலேயே நீளமான வால் கொண்ட குதிரை!

Ziya / Oct 17th 2026, 4:39 pm
image

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ‘ஜென்னி’ என்ற பெண் குதிரை, உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

ஜென்னி, அதன் உரிமையாளரான மெக்கன்சிக்கு 2019ஆம் ஆண்டு அவரது 13ஆவது பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்தது. அன்று சாதாரணப் பரிசாகக் கிடைத்த இந்தக் குதிரை, இன்று உலக சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளது.

கடந்த ஜூலை 25ஆம் திகதி கின்னஸ் அதிகாரிகள் முன்னிலையில் அளவிடப்பட்டபோது, ஜென்னியின் வால் 13 அடி 6 அங்குலம் (சுமார் 4.12 மீற்றர்) நீளமுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாலின் நீளத்தையும் அழகையும் பாதுகாக்க, கடந்த ஏழு ஆண்டுகளாக வாரத்திற்கு இரண்டு முறை அதனைச் சிறப்பாகக் கழுவி, பின்னலிட்டு, பிரத்யேகப் பைகளில் வைத்து உரிமையாளர்கள் பராமரித்து வந்துள்ளனர்.

இதற்கு முன்னர், 2012ஆம் ஆண்டு ‘ஜேடி’ என்ற குதிரை 12 அடி 6 அங்குல வாலுடன் படைத்திருந்த சாதனையை ஜென்னி தற்போது முறியடித்துள்ளது.

பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த குதிரை, இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள சாதனைக் குதிரையாக மாறியுள்ளது!

உலகிலேயே நீளமான வால் கொண்ட குதிரை அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ‘ஜென்னி’ என்ற பெண் குதிரை, உலகின் மிக நீளமான வால் கொண்ட குதிரை என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.ஜென்னி, அதன் உரிமையாளரான மெக்கன்சிக்கு 2019ஆம் ஆண்டு அவரது 13ஆவது பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்தது. அன்று சாதாரணப் பரிசாகக் கிடைத்த இந்தக் குதிரை, இன்று உலக சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளது.கடந்த ஜூலை 25ஆம் திகதி கின்னஸ் அதிகாரிகள் முன்னிலையில் அளவிடப்பட்டபோது, ஜென்னியின் வால் 13 அடி 6 அங்குலம் (சுமார் 4.12 மீற்றர்) நீளமுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.வாலின் நீளத்தையும் அழகையும் பாதுகாக்க, கடந்த ஏழு ஆண்டுகளாக வாரத்திற்கு இரண்டு முறை அதனைச் சிறப்பாகக் கழுவி, பின்னலிட்டு, பிரத்யேகப் பைகளில் வைத்து உரிமையாளர்கள் பராமரித்து வந்துள்ளனர்.இதற்கு முன்னர், 2012ஆம் ஆண்டு ‘ஜேடி’ என்ற குதிரை 12 அடி 6 அங்குல வாலுடன் படைத்திருந்த சாதனையை ஜென்னி தற்போது முறியடித்துள்ளது.பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த குதிரை, இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள சாதனைக் குதிரையாக மாறியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement