• Apr 19 2026

குளவி கூடு கலைந்ததால் ஏற்பட்ட விபரீதம்; தந்தை பரிதாப மரணம்! - இரு பிள்ளைகள் வைத்தியசாலையில்!

Chithra / May 13th 2024, 1:11 pm
image

 

கொட்டுகொட, ரத்தொழுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார் தெரிவித்தனர்.

ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில்  உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காயமடைந்த தந்தையும், இரண்டு பிள்ளைகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குளவி கூடு கலைந்ததால் ஏற்பட்ட விபரீதம்; தந்தை பரிதாப மரணம் - இரு பிள்ளைகள் வைத்தியசாலையில்  கொட்டுகொட, ரத்தொழுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார் தெரிவித்தனர்.ரத்தொலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பிரதேசத்தில்  உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலிருந்த குளவி கூடு கலைந்ததில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து காயமடைந்த தந்தையும், இரண்டு பிள்ளைகளும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement