• Apr 23 2026

விஜய்யின் வெற்றிக்காக கோயில்களில் நேர்த்திக்கடன்!

shanu / Apr 23rd 2026, 2:17 pm
image

தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என்று அவரது இரசிகர்களும் தொண்டர்களும் செய்த செயல் தற்போது வைரலாகியுள்ளது. 


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் , திரைப்பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் திரண்டு வாக்குகளைப் பதிவிட்டு வருகின்றனர். 


நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.


நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.


இதற்கிடையே தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவரது தொண்டர்கள், இரசிகர்கள் அவருக்காக கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வருகின்றனர். அத்துடன் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.


அதில் ஒரு பெண் தமிழக வெற்றிக்கழக துண்டைப் போட்டுக்கொண்டு கோயிலில் முழந்தாளிட்டு ஒவ்வொரு படிகளையும் கடந்து சென்று விஜய் வெற்றிபெறுவதற்கு பிரார்த்தனை செய்துள்ளார். 


தற்போது வரையில் விஜய்க்கான ஆதரவும் பலமும் மேலோங்கி வருவதுடன் அவரது இரசிகர்கள், தொண்டர்கள் இவ்வாறான நேர்த்திக்கடன்களை செய்வது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

விஜய்யின் வெற்றிக்காக கோயில்களில் நேர்த்திக்கடன் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என்று அவரது இரசிகர்களும் தொண்டர்களும் செய்த செயல் தற்போது வைரலாகியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் , திரைப்பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் எனப்பலரும் திரண்டு வாக்குகளைப் பதிவிட்டு வருகின்றனர். நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீலாங்கரையில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை அவர் நிறைவேற்றினார்.நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் சந்திக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால், விஜய் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தபோது, அங்கு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர்.இதற்கிடையே தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக அவரது தொண்டர்கள், இரசிகர்கள் அவருக்காக கோயில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வருகின்றனர். அத்துடன் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருகின்றனர்.அதில் ஒரு பெண் தமிழக வெற்றிக்கழக துண்டைப் போட்டுக்கொண்டு கோயிலில் முழந்தாளிட்டு ஒவ்வொரு படிகளையும் கடந்து சென்று விஜய் வெற்றிபெறுவதற்கு பிரார்த்தனை செய்துள்ளார். தற்போது வரையில் விஜய்க்கான ஆதரவும் பலமும் மேலோங்கி வருவதுடன் அவரது இரசிகர்கள், தொண்டர்கள் இவ்வாறான நேர்த்திக்கடன்களை செய்வது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement