வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.
வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் இன்று (23.04.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் மற்றும் தீர்மானங்கள் வருமாறு:
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணத் திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய பொறிமுறைகள் அவசியமாகும். குறிப்பாக, 'குடிபுகு சான்றிதழ்' பெறுவதை உறுதிப்படுத்தக் கண்காணிப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளாமல் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கு எதிரான முதற்கட்ட நடவடிக்கையாக அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த வேண்டும். இது தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கையை உள்ளூராட்சி ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கடைகளைப் பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள், அவற்றை விதிகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு மாற்றியுள்ளனர். இது தொடர்பான குழப்பங்களைத் தீர்க்க விசேட குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், வடக்கு மாகாணத்தில் 'லஞ்ச்சீற்' கட்டுப்பாட்டு விவகாரத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். இதற்காகவும் விசேட கண்காணிப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், வாழையிலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட சிறுவர் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் அவற்றின் போதாமை குறித்துப் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.
அதிகளவானோர் கூடும் பூங்காக்களில் தரமான உபகரணங்களை விரைவாகக் கொள்வனவு செய்து நிறுவுமாறு மாநகர சபை ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், இப்பூங்காக்களில் கடைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளுக்கான அனுமதி வழங்கப்படும்போது, 'பொலித்தீன் பாவனைத் தடை' என்ற நிபந்தனையை உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாகாண வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சித் திணைக்களத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த ஆணையாளர், ஆளணி வெற்றிடங்களால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், வழமையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் 'டித்வா' பேரிடர் மீள்கட்டுமான நிதி ஆகியவற்றின் கீழ் பணிகள் முறையாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போதைய விலை அதிகரிப்புக்கு ஏற்ப திட்டங்களை எவ்வாறு வினைத்திறனாக முன்னெடுப்பது என்பது குறித்துப் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) விளக்கமளித்தார்.
சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை, அடையாளம் காணப்பட்டுள்ள சில புதிய திட்டங்கள் குறித்து மேலதிக நேரடிக் கள ஆய்வுகளின் பின்னரே இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் காணி ஆணையாளர் அலுவலகங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் கலந்துகொண்ட பொ.ஐங்கரநேசன் அவர்கள், வடக்கு மாகாணத்தில் நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்களின் விவரங்களைச் சேகரிக்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். இத்திட்டத்துக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கௌரவ ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர சபை ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி மன்றங்கள், மாகாண திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்க புதிய பொறிமுறை அவசியம் – வடக்கு ஆளுநர் வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மணல் விநியோகத்தை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை முறைப்படுத்தி அனைத்து மன்றங்களுக்கும் பொதுவானதொரு நடைமுறையை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளூராட்சி ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார்.வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் இன்று (23.04.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுநர் அவர்கள் வழங்கிய முக்கிய வழிகாட்டல்கள் மற்றும் தீர்மானங்கள் வருமாறு:உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணத் திறைசேரிக்கான நிதி வருவாயை அதிகரிக்கும் வகையில் புதிய பொறிமுறைகள் அவசியமாகும். குறிப்பாக, 'குடிபுகு சான்றிதழ்' பெறுவதை உறுதிப்படுத்தக் கண்காணிப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும். இச்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளாமல் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிறுவனங்களை அடையாளப்படுத்தி, அவற்றுக்கு எதிரான முதற்கட்ட நடவடிக்கையாக அறிவித்தல்களைக் காட்சிப்படுத்த வேண்டும். இது தொடர்பான மாதாந்த முன்னேற்ற அறிக்கையை உள்ளூராட்சி ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கடைகளைப் பெற்றுக்கொண்ட உரிமையாளர்கள், அவற்றை விதிகளுக்கு முரணாக வேறு நபர்களுக்கு மாற்றியுள்ளனர். இது தொடர்பான குழப்பங்களைத் தீர்க்க விசேட குழுவொன்றை அமைத்து ஆராய்ந்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.அதேநேரம், வடக்கு மாகாணத்தில் 'லஞ்ச்சீற்' கட்டுப்பாட்டு விவகாரத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். இதற்காகவும் விசேட கண்காணிப்பு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், வாழையிலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றங்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட சிறுவர் பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களின் தரம், பாதுகாப்பு மற்றும் அவற்றின் போதாமை குறித்துப் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார். அதிகளவானோர் கூடும் பூங்காக்களில் தரமான உபகரணங்களை விரைவாகக் கொள்வனவு செய்து நிறுவுமாறு மாநகர சபை ஆணையாளருக்குப் பணிப்புரை விடுத்தார். மேலும், இப்பூங்காக்களில் கடைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளுக்கான அனுமதி வழங்கப்படும்போது, 'பொலித்தீன் பாவனைத் தடை' என்ற நிபந்தனையை உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாகாண வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளதாக அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சித் திணைக்களத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த ஆணையாளர், ஆளணி வெற்றிடங்களால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், வழமையான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் 'டித்வா' பேரிடர் மீள்கட்டுமான நிதி ஆகியவற்றின் கீழ் பணிகள் முறையாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், தற்போதைய விலை அதிகரிப்புக்கு ஏற்ப திட்டங்களை எவ்வாறு வினைத்திறனாக முன்னெடுப்பது என்பது குறித்துப் பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) விளக்கமளித்தார்.சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை, அடையாளம் காணப்பட்டுள்ள சில புதிய திட்டங்கள் குறித்து மேலதிக நேரடிக் கள ஆய்வுகளின் பின்னரே இறுதி முடிவெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது. கிராமிய அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் காணி ஆணையாளர் அலுவலகங்களின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் கலந்துகொண்ட பொ.ஐங்கரநேசன் அவர்கள், வடக்கு மாகாணத்தில் நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்களின் விவரங்களைச் சேகரிக்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். இத்திட்டத்துக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கௌரவ ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.இந்த விசேட மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், மாநகர சபை ஆணையாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.