• Apr 23 2026

படிப்படியாக சரியும் தங்கம்; திருப்தியடையும் மக்கள்!

shanu / Apr 23rd 2026, 2:55 pm
image

நாட்டில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்ட  தங்கத்தின் விலை இன்று (23) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அதற்கமைய நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று தங்கம்  2000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 


இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,538 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்த நிலையில், இன்று வீழ்ச்சியடைந்துள்ளதால் மக்கள் ஓரளவு திருப்தியடைந்துள்ளனர். 


எனினும், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதேவேளை கடந்த அக்ஷயதிருதியையின் இரண்டாவது தினத்தன்று ஒரு பவுண் தங்கம் 9500 ரூபாவால் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

படிப்படியாக சரியும் தங்கம்; திருப்தியடையும் மக்கள் நாட்டில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சம் தொட்ட  தங்கத்தின் விலை இன்று (23) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய நேற்றுடன் (22) ஒப்பிடுகையில் இன்று தங்கம்  2000 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,538 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்த நிலையில், இன்று வீழ்ச்சியடைந்துள்ளதால் மக்கள் ஓரளவு திருப்தியடைந்துள்ளனர். எனினும், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலைகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை கடந்த அக்ஷயதிருதியையின் இரண்டாவது தினத்தன்று ஒரு பவுண் தங்கம் 9500 ரூபாவால் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement