யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற் பகுதி நேற்று(23)இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது
இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாக சிறுஙமீனவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக காங்கேசன் துறையில் இருந்து மிக ரகசியமாக வரவழைக்கப்பட்ட கடற்படையின் அதிவிரைவு ரோந்து படகுகள் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியை திடீர் சுற்றி வளைப்பு செய்தன.
இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கட்டைக்காடு கடற்பகுதி சுற்றிவளைப்பு- மூன்று பேர் கைது யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற் பகுதி நேற்று(23)இரவு கடற்படையால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டதுஇதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருவதாக சிறுஙமீனவர்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறதுஇதன் ஒரு பகுதியாக காங்கேசன் துறையில் இருந்து மிக ரகசியமாக வரவழைக்கப்பட்ட கடற்படையின் அதிவிரைவு ரோந்து படகுகள் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியை திடீர் சுற்றி வளைப்பு செய்தன. இதன் போது சட்ட விரோதமாக ஒளிப்பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று நபர்கள் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.