• Oct 28 2026

யாழில் 500 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

Aathira / Oct 28th 2026, 11:01 am
image

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கையின்போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே நேற்று இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, 24 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் 500 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கையின்போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் – மானிப்பாய் சென் பீற்றர்ஸ் தேவாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே நேற்று இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், பெருமளவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போது, 24 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 500 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement