• Apr 17 2026

T-20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி; மூன்றாவது தடவை சம்பியனை தட்டித்தூக்கிய இந்திய அணி!

shanu / Mar 9th 2026, 12:13 pm
image

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று (8) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 


இதற்கமைய இந்திய அணி மூன்றாவது முறையாக இருபதுக்கு 20 தொடரில் சம்பியனாகி சாதனை படைத்துள்ளது. 


குறித்த போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டு மைதானத்தில்  நேற்று இரவு 7 மணிக்கு ஆரம்பமானது. 


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 


அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 


இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இசன் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 


இந்த நிலையில் 256 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 


நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் சேட்னர் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாவது முறை சம்பியனை இந்திய அணி தட்டித்தூக்கியதையடுத்து இந்திய அணியின் இரசிகர்கள் வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாடினர்.

T-20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி; மூன்றாவது தடவை சம்பியனை தட்டித்தூக்கிய இந்திய அணி உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று (8) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய இந்திய அணி மூன்றாவது முறையாக இருபதுக்கு 20 தொடரில் சம்பியனாகி சாதனை படைத்துள்ளது. குறித்த போட்டி அஹமதாபாத் நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டு மைதானத்தில்  நேற்று இரவு 7 மணிக்கு ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இசன் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். இந்த நிலையில் 256 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மிட்செல் சேட்னர் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார். இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாவது முறை சம்பியனை இந்திய அணி தட்டித்தூக்கியதையடுத்து இந்திய அணியின் இரசிகர்கள் வெற்றியை ஆரவாரமாகக் கொண்டாடினர்.

Advertisement

Advertisement

Advertisement