• Apr 17 2026

சவுதி அரேபியா குடியிருப்பு மீது ஏவுகணை தாக்குதல்!

Ziya / Mar 9th 2026, 12:26 pm
image

வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரானிய எதிர் தாக்குதல்கள் இரண்டாவது வாரத்தில் நுழைந்த நிலையில், சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் ஒரு குடியிருப்பு பகுதியில் ஏவுகணை விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த  தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர் ஒரு  இந்தியர் மற்றும் மற்றும்  வங்காளதேசத்தினை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 12 பேர் காயமடைந்தனர் என்று சவுதி சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. 

இத்தாக்குதலில் ஏவுகணை விழுந்தது பராமரிப்பு மற்றும் துப்புரவு நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்புப் பகுதியிலாகும்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் அமைந்துள்ள அல்-கர்ஜ் கவர்னரேட் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேடார் அமைப்புகளை குறிவைத்து கடந்த வாரத்தில் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் முன்பே தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை, சவுதி பாதுகாப்பு அமைச்சகம் 15 ட்ரோன்களை இடைமறித்ததாகவும், இதில் தலைநகர் ரியாத் நகரில் தாக்குதல் முயற்சியும் அடங்கியது என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டிகள் மீது தாக்குதல் நடக்கப்பட்டதாகவும், பஹ்ரைன் நீர் உப்புநீக்கும் ஆலை சேதமடைந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஈரானிய தலைநகரைச் சுற்றியுள்ள ஐந்து எண்ணெய் நிலையங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கி, பலர் கொல்லப்பட்டு நகரம் கடுமையான புகையால் மூடியதாகவும், போரின் ஒன்பதாவது நாளில் மத்திய கிழக்கில் ஆறு மாதங்கள் வரை ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர போதுமான பொருட்கள் IRGC க்கு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சவுதி அரேபியா குடியிருப்பு மீது ஏவுகணை தாக்குதல் வளைகுடா நாடுகளில் அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரானிய எதிர் தாக்குதல்கள் இரண்டாவது வாரத்தில் நுழைந்த நிலையில், சவுதி அரேபியாவின் அல்-கர்ஜ் நகரில் ஒரு குடியிருப்பு பகுதியில் ஏவுகணை விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் என்று சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த  தாக்குதலில் இரண்டு வெளிநாட்டவர் ஒரு  இந்தியர் மற்றும் மற்றும்  வங்காளதேசத்தினை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 12 பேர் காயமடைந்தனர் என்று சவுதி சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் ஏவுகணை விழுந்தது பராமரிப்பு மற்றும் துப்புரவு நிறுவனத்திற்கு சொந்தமான குடியிருப்புப் பகுதியிலாகும்.ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளம் அமைந்துள்ள அல்-கர்ஜ் கவர்னரேட் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரேடார் அமைப்புகளை குறிவைத்து கடந்த வாரத்தில் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் முன்பே தெரிவித்தது.கடந்த சனிக்கிழமை, சவுதி பாதுகாப்பு அமைச்சகம் 15 ட்ரோன்களை இடைமறித்ததாகவும், இதில் தலைநகர் ரியாத் நகரில் தாக்குதல் முயற்சியும் அடங்கியது என்றும் அறிவிக்கப்பட்டது.இதற்கிடையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் எரிபொருள் தொட்டிகள் மீது தாக்குதல் நடக்கப்பட்டதாகவும், பஹ்ரைன் நீர் உப்புநீக்கும் ஆலை சேதமடைந்ததாகவும் தகவல்கள் வந்துள்ளன.ஈரானிய தலைநகரைச் சுற்றியுள்ள ஐந்து எண்ணெய் நிலையங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்கி, பலர் கொல்லப்பட்டு நகரம் கடுமையான புகையால் மூடியதாகவும், போரின் ஒன்பதாவது நாளில் மத்திய கிழக்கில் ஆறு மாதங்கள் வரை ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர போதுமான பொருட்கள் IRGC க்கு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement