தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்தனர். எனினும், சென்சார் சிக்கல், இணையத்தில் படம் கசிந்ததாக வெளியான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை இப்படம் எதிர்கொண்டது.
இந்நிலையில், அனைத்து சவால்களையும் கடந்து இன்று உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்கு திரைகளில் “ஜனநாயகன்” வெளியாகியுள்ளது. தமிழகம் தவிர்ந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் காலை 9 மணியளவில் முதல் காட்சி ஆரம்பமானது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் முன்பாக ரசிகர்களின் கொண்டாட்டம் இடம்பெறுவது வழக்கம். அதிலும் இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் திரையரங்குகளில் பேனர்கள், தோரணங்கள் அமைத்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதலே பல்வேறு திரையரங்குகள் முன்பாக மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், வழக்கமாக “தளபதி விஜய்” என்ற பெயருடன் வெளியாகும் விஜய் திரைப்படங்களுக்கு மாறாக, முதல் முறையாக “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டுடன் “ஜனநாயகன்” திரைப்படம் வெளியாகியுள்ளது.
‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்’ டைட்டில் கார்டுடன் வெளியானது ஜனநாயகன்; ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் இன்று (23) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்தனர். எனினும், சென்சார் சிக்கல், இணையத்தில் படம் கசிந்ததாக வெளியான தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை இப்படம் எதிர்கொண்டது.இந்நிலையில், அனைத்து சவால்களையும் கடந்து இன்று உலகம் முழுவதும் சுமார் 8,000 திரையரங்கு திரைகளில் “ஜனநாயகன்” வெளியாகியுள்ளது. தமிழகம் தவிர்ந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் காலை 9 மணியளவில் முதல் காட்சி ஆரம்பமானது.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.விஜய் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் திரையரங்குகள் முன்பாக ரசிகர்களின் கொண்டாட்டம் இடம்பெறுவது வழக்கம். அதிலும் இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் திரையரங்குகளில் பேனர்கள், தோரணங்கள் அமைத்து கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதலே பல்வேறு திரையரங்குகள் முன்பாக மேளதாளங்கள் முழங்க ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.மேலும், வழக்கமாக “தளபதி விஜய்” என்ற பெயருடன் வெளியாகும் விஜய் திரைப்படங்களுக்கு மாறாக, முதல் முறையாக “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டுடன் “ஜனநாயகன்” திரைப்படம் வெளியாகியுள்ளது.