• Jul 26 2026

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு! 106 பேர் காயம்: பிரதமர் அதிர்ச்சித் தகவல்!

Chithra / Jul 23rd 2026, 11:02 am
image

 

2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 


பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர். படிகிவதை தொடர்பில் இக்காலப்பகுதியில் 141 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடுமையான காயம் ஏற்படுத்தியம தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் 28 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 


அரச பல்கலைக்கழக நிகழும் மனிதாபிமானமற்ற பகிடிவதைகளைத் தடுப்பதற்க்காக நிறுவன மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


இதற்கமைய பகிடிவதைகளை ஒழிப்பதற்குரிய வழிமுறைகளை முன்வைப்பதற்கு விசேட செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த செயலணி ஊடாக சகல பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.

 

மாணவர்களின் உளவியலை மேம்படுத்துவதற்கு உரிய விசேட திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான மஹபொல மற்றும் மாணவர் உதவுத்தொகை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

பகிடிவதையால் ஒருவர் உயிரிழப்பு 106 பேர் காயம்: பிரதமர் அதிர்ச்சித் தகவல்  2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.2020 ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பகிடிவதை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் காயமடைந்துள்ளனர். படிகிவதை தொடர்பில் இக்காலப்பகுதியில் 141 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடுமையான காயம் ஏற்படுத்தியம தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்தில் 28 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச பல்கலைக்கழக நிகழும் மனிதாபிமானமற்ற பகிடிவதைகளைத் தடுப்பதற்க்காக நிறுவன மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய பகிடிவதைகளை ஒழிப்பதற்குரிய வழிமுறைகளை முன்வைப்பதற்கு விசேட செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த செயலணி ஊடாக சகல பல்கலைக்கழகங்களுக்கும் வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் உளவியலை மேம்படுத்துவதற்கு உரிய விசேட திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான மஹபொல மற்றும் மாணவர் உதவுத்தொகை கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றார்.

Advertisement

Advertisement

Advertisement