• Jun 29 2026

கல்முனையில் திடீர் சோதனை- 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

shanu / Jun 29th 2026, 5:20 pm
image

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்     விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட  1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.


இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் இன்று (29) வரை    கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி  நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண பணிப்புரைக்கமைய  மேற்கொள்ளப்பட்டது.



இத் திடீர் சோதனை நடவடிக்கையில்      கல்முனை ,  சவளைக்கடை  பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  கொண்டதுடன்  சவளக்கடை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  , கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி   ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.


அத்துடன் தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் போக்குவரத்து பிரிவு   உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.


குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது  மோட்டார் சைக்கிள்கள்  கட்டங் கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.அத்துடன்  வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

 

அத்துடன்  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது,  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,   தலைக்கவசம் அணியாது செல்வது   ,  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.


மேலும் இவ் விசேட சோதனை நடவடிக்கையில்  75 மோட்டார் சைக்கிள்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் ஆபத்து விளைவிக்கும் நோக்குடன்  வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 117 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


இதே வேளை   பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும்  நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு  எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கல்முனையில் திடீர் சோதனை- 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில்     விசேட  திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 32 மோட்டார் சைக்கிள் உட்பட  1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.இச்சோதனை நடவடிக்கையானது  கடந்த வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் இன்று (29) வரை    கிழக்கு மாகாண  சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர  ஆலோசனையில்  அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி  நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய பதில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்த நாராயண பணிப்புரைக்கமைய  மேற்கொள்ளப்பட்டது.இத் திடீர் சோதனை நடவடிக்கையில்      கல்முனை ,  சவளைக்கடை  பொலிஸ் நிலைய    பொலிஸார்   இணைந்து  கொண்டதுடன்  சவளக்கடை  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  , கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய  மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி   ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.அத்துடன் தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் போக்குவரத்து பிரிவு   உள்ளிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் பங்கேற்று தத்தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.குறிப்பாக இச்சோதனை நடவடிக்கையின் போது  மோட்டார் சைக்கிள்கள்  கட்டங் கட்டமாக பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன.அத்துடன்  வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள்  பொலிஸாரினால் வழங்கப்பட்டன. அத்துடன்  மோட்டார் சைக்கிள் ஆவணம்  காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது,  சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,   தலைக்கவசம் அணியாது செல்வது   ,  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,   அதிவேகமாக செல்வது  மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள்  தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டன.மேலும் இவ் விசேட சோதனை நடவடிக்கையில்  75 மோட்டார் சைக்கிள்கள்  பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் ஆபத்து விளைவிக்கும் நோக்குடன்  வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 117 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.இதே வேளை   பொதுப்போக்குவரத்து சட்டங்களை மீறும்  நபர்கள் சட்ட விரோத கடத்தல்களுக்கு துணை நிற்கும் நபர்களுக்கு  எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement