முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டார, ஜனாதிபதியின் செலவினங்களின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் குறித்த பதவிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை மற்றும் அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் 1.93 மில்லியன் ரூபாவும்,
திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் 4.26 மில்லியன் ரூபாவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிணை கோரிக்கையை நிராகரித்தார்.
அத்துடன், சுஜீஸ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுஜீஸ்வர பண்டார கைது: கோட்டாபயவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சுஜீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டார, ஜனாதிபதியின் செலவினங்களின் கீழ் இரண்டு சம்பளங்களை பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஜூன் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.அவர் குறித்த பதவிகளில் பணியாற்றிய காலப்பகுதியில் அரச வாகனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை மற்றும் அரச ஊழியர்கள் அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.சுஜீஸ்வர பண்டார ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் 1.93 மில்லியன் ரூபாவும், திட்டப் பணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் 4.26 மில்லியன் ரூபாவும் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தின் செயலாளராக பணியாற்றிய சுஜீஸ்வர பண்டாரவின் பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன பிணை கோரிக்கையை நிராகரித்தார்.அத்துடன், சுஜீஸ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.