சர்வதேச கடல் எல்லையை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று அதிகாலை கைது செய்துள்ளது.
குறித்த மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறு மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (12) கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை செய்திகள்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிப்பதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அக்கடிதத்தில் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த ஆறு தமிழக மீனவர்கள் கைது சர்வதேச கடல் எல்லையை கடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று அதிகாலை கைது செய்துள்ளது.குறித்த மீனவர்கள் மன்னார் கடற்பகுதியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறு மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (12) கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை செய்திகள்இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிப்பதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி அக்கடிதத்தில் ஜோசப் விஜய் குறிப்பிட்டுள்ளார்.