• May 06 2026

தென்னிலங்கையில் மற்றுமொரு விகாரையில் துப்பாக்கி சூடு...! samugammedia

Ziya / Jan 25th 2024, 9:23 am
image

குருநாகல், தொடம்கஸ்லந்த - உடத்தபொல புராதன விகாரையில் நேற்றிரவு(24) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விகாரை பீடாதிபதி கல்னாவே பன்னகிட்டி தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், பன்னகிட்டி தேரர் அப்போது விடுதியில் வேறு இடத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் விசாரணையில், ஸ்டன் கன் போன்ற துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றுமுன்தினம்  விகாரையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிலங்கையில் மற்றுமொரு விகாரையில் துப்பாக்கி சூடு. samugammedia குருநாகல், தொடம்கஸ்லந்த - உடத்தபொல புராதன விகாரையில் நேற்றிரவு(24) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விகாரை பீடாதிபதி கல்னாவே பன்னகிட்டி தேரரின் வரவேற்பறையில் உள்ள ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், பன்னகிட்டி தேரர் அப்போது விடுதியில் வேறு இடத்தில் உறங்கிக் கொண்டிருந்ததால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாரின் விசாரணையில், ஸ்டன் கன் போன்ற துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை நேற்றுமுன்தினம்  விகாரையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement