• Sep 21 2026

குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து அதிர்ச்சி - பெற்றோர்களுக்கு CAA அவசர எச்சரிக்கை

Chithra / Sep 20th 2026, 10:31 am
image


சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்களின் (Diapers) தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்துப் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கேட்டுக்கொண்டுள்ளது.


குழந்தைகளுக்கான டயப்பர்களைப் பயன்படுத்தும்போது அவை எளிதில் கிழிந்து போவது மற்றும் மக்கிப் போவது தொடர்பாகப் நுகர்வோரிடமிருந்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை உடனடியாக சிறப்பு விசாரணை மற்றும் திடீர் சோதனைகளை மேற்கொண்டது.


கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சட்டப்பூர்வ விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் சிக்கின. 


பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்கள் எதுவுமின்றி இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்ட மற்றும் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட டயப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 


வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொட்டாவையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.


டயப்பர் போன்ற சுகாதாரப் பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, அதன் பொதியில் (Package) இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வாங்ககுமாறு பெற்றோருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


நீங்கள் வாங்கும் டயப்பர்களில் தரக்குறைபாடு, கிழிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்திற்கு (Hotline) அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான டயப்பர்கள் குறித்து அதிர்ச்சி - பெற்றோர்களுக்கு CAA அவசர எச்சரிக்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் சில குழந்தைகளுக்கான டயப்பர்களின் (Diapers) தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்துப் பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கேட்டுக்கொண்டுள்ளது.குழந்தைகளுக்கான டயப்பர்களைப் பயன்படுத்தும்போது அவை எளிதில் கிழிந்து போவது மற்றும் மக்கிப் போவது தொடர்பாகப் நுகர்வோரிடமிருந்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை உடனடியாக சிறப்பு விசாரணை மற்றும் திடீர் சோதனைகளை மேற்கொண்டது.கொட்டாவை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, சட்டப்பூர்வ விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் சிக்கின. பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் அல்லது இணையதள விவரங்கள் எதுவுமின்றி இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்ட மற்றும் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட டயப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கொட்டாவையில் உள்ள நிறுவனத்திற்கு 10,000 ரூபாயும், புறக்கோட்டையில் உள்ள நிறுவனத்திற்கு 25,000 ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.டயப்பர் போன்ற சுகாதாரப் பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது, அதன் பொதியில் (Package) இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்பு எண்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து வாங்ககுமாறு பெற்றோருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.நீங்கள் வாங்கும் டயப்பர்களில் தரக்குறைபாடு, கிழிதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்திற்கு (Hotline) அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு உடனடியாகப் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement