• Oct 20 2026

உலுக்கிய கடும் மின்னல் தாக்கம்; 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - தீப்பற்றி எரிந்த பனை மரம்!

Chithra / Oct 20th 2026, 1:28 pm
image


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் ஏற்பட்ட கடுமையான இடி, மின்னல் தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.


நேற்று திங்கட்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.


குறிப்பாக, புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட முத்துவாப்பா லேனில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


இடி, மின்னல் தாக்கத்தின் காரணமாக வீடுகளின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் சில முற்றாகவும் ஏனையவை பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலாளர்  நிஹாறா மௌஜூத்தின் பணிப்புரைக்கு அமைய, பாதிக்கப்பட்ட வீடுகளில் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


அதன்படி, காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.என். நஜ்மி, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.


இதன்போது, வீடுகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.


மேலும், பாதிப்புகளின் முழுமையான விபரங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் மட்டக்களப்பில் மின்னல் தாக்கியதில் பனை மரம் தீப்பற்றி எரியும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  


உலுக்கிய கடும் மின்னல் தாக்கம்; 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் - தீப்பற்றி எரிந்த பனை மரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பகுதியில் ஏற்பட்ட கடுமையான இடி, மின்னல் தாக்கம் காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், வீடுகளில் இருந்த இலத்திரனியல் உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.நேற்று திங்கட்கிழமை (19) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தினால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.குறிப்பாக, புதிய காத்தான்குடி தெற்கு 167C கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட முத்துவாப்பா லேனில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இடி, மின்னல் தாக்கத்தின் காரணமாக வீடுகளின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த இலத்திரனியல் உபகரணங்கள் சில முற்றாகவும் ஏனையவை பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காத்தான்குடி பிரதேச செயலாளர்  நிஹாறா மௌஜூத்தின் பணிப்புரைக்கு அமைய, பாதிக்கப்பட்ட வீடுகளில் சேத மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதன்படி, காத்தான்குடி பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.என். நஜ்மி, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம். ஜரூப் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.இதன்போது, வீடுகள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.மேலும், பாதிப்புகளின் முழுமையான விபரங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் மட்டக்களப்பில் மின்னல் தாக்கியதில் பனை மரம் தீப்பற்றி எரியும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement

Advertisement