• Apr 30 2026

இரகசியமாக உருக்குலைக்கப்படும் வட்டுவாகல் பாலம்! தமிழரசுக்கட்சி பாராமுகம்! சி.சிவமோகன் குற்றச்சாட்டு

Chithra / Apr 30th 2026, 7:50 pm
image

ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.  

வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் நேற்றையதினம் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

2009ல் எங்களது 30 வருட கால ஈழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்ற ஒரு இடம் இந்த இடத்தில் தான் சர்வதேச நாடுகளின் துரோக தனத்தினாலும், குழி பறிப்புக்களாலும் எமது ஈழ விடுதலை போராட்டம் முற்றுப்பெற்ற ஒரு இடம். இந்த இடம் உருக்குலைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

இந்த விடயங்களிலே அக்கறை கொள்வதற்கு கூட எமது கட்சியினர் முன்வருவதில்லை. தமிழரசுக்கட்சி இன்று துரோகக் கூட்டத்தின் கையில் சிக்கி இருக்கின்றது.

வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகளை ஆராயாத தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சிறீதரனுக்கு கட்சியை வழிநடத்த என்ன தகுதி இருக்கின்றது.

உடனடியாக அவர்கள் கட்சியில் இருந்து வெளிறேி ஜனநாயக ரீதியில் அதனை இயங்க விட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழருக்குரிய ஒரே ஒரு அடையாளமாக இருந்த கட்சி தமிழரசுக்கட்சி. இவ்வாறான பிரச்சினையை.  கதைப்பதற்கு யாரும் இல்லை. தங்களுக்குள்ளே அடிபடும் பிரச்சினைகளை கதைப்பதற்கும் இன்னும் கட்சியை அழிப்பதற்குமே உள்ளே இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் சேர்ந்து பயணித்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பாதை போடப்பட்டிருக்கின்றது என்றால் ஒட்டுமொத்தமாக உடைக்க போகிறார்கள்.  ஆரம்ப காலத்தில் கூறப்பட்டது இப்பாலம் உடைக்கப்படாமல் இந்த பாலத்தை தற்காலிகமாக வைத்துக்கொண்டு இன்னுமொரு பாலத்தை போட்டிருக்க வேண்டும் அது தான் நியாயம். 

இந்த பாலத்தை உருக்குலைக்கின்றார்கள் என்றால் உள்நோக்கம் கொண்ட இந்த அரசு  செய்யும் ஒரு செயற்பாடு என்பது இவ் விடயத்தில் தெரிய வருகிறது என மேலும் தெரிவித்தார்.


இரகசியமாக உருக்குலைக்கப்படும் வட்டுவாகல் பாலம் தமிழரசுக்கட்சி பாராமுகம் சி.சிவமோகன் குற்றச்சாட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகத் திகழும் வட்டுவாகல் பாலம் தற்போது இரகசியமாக உருக்குலைக்கப்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.  வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகள் தொடர்பில் நேற்றையதினம் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.2009ல் எங்களது 30 வருட கால ஈழ விடுதலைப் போராட்டம் முற்றுப்பெற்ற ஒரு இடம் இந்த இடத்தில் தான் சர்வதேச நாடுகளின் துரோக தனத்தினாலும், குழி பறிப்புக்களாலும் எமது ஈழ விடுதலை போராட்டம் முற்றுப்பெற்ற ஒரு இடம். இந்த இடம் உருக்குலைக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.முல்லைத்தீவு மாவட்டத்திலே காணப்படும் எமது அடையாளங்கள் இரகசியமாக அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.இந்த விடயங்களிலே அக்கறை கொள்வதற்கு கூட எமது கட்சியினர் முன்வருவதில்லை. தமிழரசுக்கட்சி இன்று துரோகக் கூட்டத்தின் கையில் சிக்கி இருக்கின்றது.வட்டுவாகல் பாலத்தின் நிலைமைகளை ஆராயாத தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சிறீதரனுக்கு கட்சியை வழிநடத்த என்ன தகுதி இருக்கின்றது.உடனடியாக அவர்கள் கட்சியில் இருந்து வெளிறேி ஜனநாயக ரீதியில் அதனை இயங்க விட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழருக்குரிய ஒரே ஒரு அடையாளமாக இருந்த கட்சி தமிழரசுக்கட்சி. இவ்வாறான பிரச்சினையை.  கதைப்பதற்கு யாரும் இல்லை. தங்களுக்குள்ளே அடிபடும் பிரச்சினைகளை கதைப்பதற்கும் இன்னும் கட்சியை அழிப்பதற்குமே உள்ளே இருப்பவர்களும் வெளியே இருப்பவர்களும் சேர்ந்து பயணித்து கொண்டிருக்கின்றார்கள்.இந்த பாலத்திற்கு எவ்வித சேதமும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இதற்கான பாதை போடப்பட்டிருக்கின்றது என்றால் ஒட்டுமொத்தமாக உடைக்க போகிறார்கள்.  ஆரம்ப காலத்தில் கூறப்பட்டது இப்பாலம் உடைக்கப்படாமல் இந்த பாலத்தை தற்காலிகமாக வைத்துக்கொண்டு இன்னுமொரு பாலத்தை போட்டிருக்க வேண்டும் அது தான் நியாயம். இந்த பாலத்தை உருக்குலைக்கின்றார்கள் என்றால் உள்நோக்கம் கொண்ட இந்த அரசு  செய்யும் ஒரு செயற்பாடு என்பது இவ் விடயத்தில் தெரிய வருகிறது என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement