• Aug 04 2026

தேங்கியுள்ள வழக்குகளைத் துரிதப்படுத்த விசேட தெரிவுக்குழு கோரி சஜித் முன்மொழிவு

dorin / Aug 4th 2026, 11:11 am
image

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று முன்மொழிவொன்றில் கையொப்பமிடப்பட்டது. 

இந்த முன்மொழிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் கையொப்பமிட்டனர். 

இதன்படி, அந்த முன்மொழிவை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

தேங்கியுள்ள வழக்குகளைத் துரிதப்படுத்த விசேட தெரிவுக்குழு கோரி சஜித் முன்மொழிவு தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று முன்மொழிவொன்றில் கையொப்பமிடப்பட்டது. இந்த முன்மொழிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் கையொப்பமிட்டனர். இதன்படி, அந்த முன்மொழிவை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement