அமெரிக்காவின் நியூயோர்க்கைச் சேர்ந்த 38 வயதான டியர்ட்ரே கீன், 34 வார கர்ப்பிணியாக இருந்தபோதே 2026 நியூயோர்க் சிட்டி மாரத்தான் போட்டியை நிறைவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.
42.195 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் போட்டியை அவர் 4 மணித்தியாலங்கள், 6 நிமிடங்கள், 55 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.
ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்ட அவர், மருத்துவரின் ஆலோசனை மற்றும் அனுமதியுடன் கர்ப்ப காலத்திலும் ஓட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.
கர்ப்பத்திற்கேற்ப ஓட்ட வேகத்தைக் குறைத்தும், இடையிடையே நடந்தும், தேவையான உணவு மற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டும் போட்டியை நிறைவு செய்துள்ளார்.
அவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில், கர்ப்பத்தின் இறுதிக்கட்டத்தில் மாரத்தான் போன்ற தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.
சிக்கலற்ற கர்ப்ப காலத்தில் மிதமான உடற்பயிற்சிகள் நன்மை தரக்கூடும் என்றாலும், மாரத்தான் போன்ற தீவிர உடற்பயிற்சிகளின் பாதுகாப்பு குறித்து போதுமான ஆய்வுகள் இல்லை. எனவே, கர்ப்ப காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
34 வார கர்ப்பத்திலும் மாரத்தான் ஓட்டம் அமெரிக்காவின் நியூயோர்க்கைச் சேர்ந்த 38 வயதான டியர்ட்ரே கீன், 34 வார கர்ப்பிணியாக இருந்தபோதே 2026 நியூயோர்க் சிட்டி மாரத்தான் போட்டியை நிறைவு செய்து கவனம் ஈர்த்துள்ளார்.42.195 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் போட்டியை அவர் 4 மணித்தியாலங்கள், 6 நிமிடங்கள், 55 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.ஏற்கனவே 60க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் கொண்ட அவர், மருத்துவரின் ஆலோசனை மற்றும் அனுமதியுடன் கர்ப்ப காலத்திலும் ஓட்டத்தைத் தொடர்ந்துள்ளார்.கர்ப்பத்திற்கேற்ப ஓட்ட வேகத்தைக் குறைத்தும், இடையிடையே நடந்தும், தேவையான உணவு மற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டும் போட்டியை நிறைவு செய்துள்ளார்.அவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வரும் நிலையில், கர்ப்பத்தின் இறுதிக்கட்டத்தில் மாரத்தான் போன்ற தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதன் பாதுகாப்பு குறித்த விவாதங்களும் எழுந்துள்ளன.சிக்கலற்ற கர்ப்ப காலத்தில் மிதமான உடற்பயிற்சிகள் நன்மை தரக்கூடும் என்றாலும், மாரத்தான் போன்ற தீவிர உடற்பயிற்சிகளின் பாதுகாப்பு குறித்து போதுமான ஆய்வுகள் இல்லை. எனவே, கர்ப்ப காலத்தில் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.