• Nov 25 2026

உங்கள் வீட்டுக்கும் இலவச ஸ்மார்ட் மின்மானி கிடைக்குமா? 2027இல் புதிய திட்டம்!

Chithra / Nov 25th 2026, 3:25 pm
image


2027ஆம் ஆண்டில் மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


இதற்கமைய, இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) சேவைப் பகுதிகளில் மாதாந்தம் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து பாவனையாளர்களுக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


மேலும், குளியாப்பிட்டிய, பேராதனை, பத்தரமுல்ல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் நான்கு மின்சார விநியோகக் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மின்வெட்டு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரித்தல், மின்சாரத் தேவையைச் சீராக நிர்வகித்தல் மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட பரவலாக்கப்பட்ட மின்சக்தி உற்பத்தி மூலங்களைத் தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

உங்கள் வீட்டுக்கும் இலவச ஸ்மார்ட் மின்மானி கிடைக்குமா 2027இல் புதிய திட்டம் 2027ஆம் ஆண்டில் மாதாந்தம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் 3 இலட்சம் மின்சாரப் பாவனையாளர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) 12 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இதற்கமைய, இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் (LECO) சேவைப் பகுதிகளில் மாதாந்தம் 120 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து பாவனையாளர்களுக்கும் ஸ்மார்ட் மின்மானிகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும், குளியாப்பிட்டிய, பேராதனை, பத்தரமுல்ல மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் நான்கு மின்சார விநியோகக் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மின்வெட்டு முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், மின்சாரக் கட்டமைப்பின் செயல்திறனை அதிகரித்தல், மின்சாரத் தேவையைச் சீராக நிர்வகித்தல் மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட பரவலாக்கப்பட்ட மின்சக்தி உற்பத்தி மூலங்களைத் தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement