• May 16 2026

தெற்கில் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது; அம்பாறை, மட்டக்களப்பில் ஏன் வழங்கவில்லை-கோடீஸ்வரன் எம்.பி !

Ziya / Jan 21st 2026, 2:55 pm
image

தெற்கில் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது ஆனால்  அம்பாறை, மட்டக்களப்பில் ஏன் வழங்கவில்லை  என பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற டித்வா அனர்த்தம் தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

அனர்த்ததின் பாரிய பாதிப்பால் நிவாரணம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் பல பாதிப்பை அனர்த்தம் ஏற்படுத்தியிருந்தது.

மக்கள் அனர்த்தினை உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்த முடியாத சந்தர்பத்தில்,   நிவாரணம் வழங்கப்படாமல் அனர்த்த பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்கள் பல   பாதிக்கப்பட்டுள்ளன.

அதிலும் குறிப்பாக பண்ணையர்கள் பாதிக்கப்பட்டமையால் இன்று வரை இந்த இழப்பீடுகள் கொடுக்கப்படவில்லை.

ஆனால் தெற்கில் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது .

உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்த முடியாத  பாதிக்கப்பட்ட மக்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண உதவிகள்  வழங்கப்பட வேண்டும்

கடலரிப்பால் அள்ளுண்டு போகும் திருக்கோவில் மயானத்தைக் கூட பாதுகாக்க  முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.


தெற்கில் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது; அம்பாறை, மட்டக்களப்பில் ஏன் வழங்கவில்லை-கோடீஸ்வரன் எம்.பி தெற்கில் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது ஆனால்  அம்பாறை, மட்டக்களப்பில் ஏன் வழங்கவில்லை  என பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற டித்வா அனர்த்தம் தொடர்பான விவாதத்தின்போது உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அனர்த்ததின் பாரிய பாதிப்பால் நிவாரணம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் பல பாதிப்பை அனர்த்தம் ஏற்படுத்தியிருந்தது.மக்கள் அனர்த்தினை உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்த முடியாத சந்தர்பத்தில்,   நிவாரணம் வழங்கப்படாமல் அனர்த்த பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்கள் பல   பாதிக்கப்பட்டுள்ளன.அதிலும் குறிப்பாக பண்ணையர்கள் பாதிக்கப்பட்டமையால் இன்று வரை இந்த இழப்பீடுகள் கொடுக்கப்படவில்லை.ஆனால் தெற்கில் பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது .உரிய நேரத்தில் அதிகாரிகளுக்கு  தெரியப்படுத்த முடியாத  பாதிக்கப்பட்ட மக்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கான நிவாரண உதவிகள்  வழங்கப்பட வேண்டும்கடலரிப்பால் அள்ளுண்டு போகும் திருக்கோவில் மயானத்தைக் கூட பாதுகாக்க  முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement