சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி, 115 தோட்டாக்கள், கைக்குண்டு மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
மித்தெனியவில் உள்ள ஒரு காணி ஒன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"ஐஸ்" போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூலப்பொருட்களை உள்ளடக்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி சில தினங்களுக்கு முன் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானது என குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார்.
பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் நீதிமன்றத்தால் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பத் மனம்பேரியின் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி மீட்பு சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் தங்க முலாம் பூசப்பட்ட T56 ரக துப்பாக்கி, 115 தோட்டாக்கள், கைக்குண்டு மற்றும் ஒரு கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. மித்தெனியவில் உள்ள ஒரு காணி ஒன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.பெக்கோ சமன் மற்றும் சம்பத் மனம்பேரியவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவல்களின்படி, இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டன. பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "ஐஸ்" போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மூலப்பொருட்களை உள்ளடக்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி சில தினங்களுக்கு முன் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானது என குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த பின்னணியில் முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் சம்பத் மனம்பேரி தேடப்பட்டு வந்தார். பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் நீதிமன்றத்தால் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.