யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சியாக்க தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்று குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் கைப்பற்றப்பட்டது.
யாழ்.மாநகர சுகாதார குழுத் தலைவர் சாருஜன், மாநகர பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன், மாநகர சபை உறுப்பினர் சு.நிஷாந்தன், மயூரன் உள்ளிட்ட மாநகர சபை குழுவினரால் குறித்த கொல்களம் நேற்று இரவு முற்றுகையிடப்பட்டது.
நத்தார் தினத்தை முன்னிட்டு அனுமதியற்ற முறையில் காது பட்டி இன்றி குறித்த மாடுகள் கொண்டுவரப்பட்டு இறைச்சியாக்க வெட்டதயாராக வைக்கப்பட்ட நிலையில் மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மாடுகள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழில் அனுமதியின்றி கொல்களத்தில் வெட்ட இருந்த 15 மாடுகள் மீட்பு யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சியாக்க தடுத்து வைக்கப்பட்டிருந்த கன்று குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் கைப்பற்றப்பட்டது.யாழ்.மாநகர சுகாதார குழுத் தலைவர் சாருஜன், மாநகர பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன், மாநகர சபை உறுப்பினர் சு.நிஷாந்தன், மயூரன் உள்ளிட்ட மாநகர சபை குழுவினரால் குறித்த கொல்களம் நேற்று இரவு முற்றுகையிடப்பட்டது.நத்தார் தினத்தை முன்னிட்டு அனுமதியற்ற முறையில் காது பட்டி இன்றி குறித்த மாடுகள் கொண்டுவரப்பட்டு இறைச்சியாக்க வெட்டதயாராக வைக்கப்பட்ட நிலையில் மாநகர சபை மேற்பார்வை உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த மாடுகள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டதுடன், உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.