• May 18 2026

டித்வா சூறாவளியால் கண்டியில் 241 பேர் உயிரிழப்பு

Chithra / Dec 25th 2025, 8:46 am
image


டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 

68 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


இந்த அனர்த்தம் காரணமாக 114 பேர் காயமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.


இந்தப் பேரிடர் காரணமாக, 1959 வீடுகள் முழுமையாகவும், 16,565 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. 


இதன் விளைவாக, 55,804 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து எண்பத்தோராயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.


பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திரு. ரணவீர, கண்டி மாவட்டத்தில் 23,244 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும், மேலும் 2,089 குடும்பங்கள் 95 பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.


மேலும், இந்த குழு கூட்டத்தில், 323 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 1791 குழந்தைகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தால் தாய்மார்களை இழந்த 7 குழந்தைகளும், தந்தையர்களை இழந்த 32 குழந்தைகளும், தாய், தந்தையர் இருவரையும் இழந்த 3 குழந்தைகளும் உள்ளதாகவும் அவர் கூறினார்.


டித்வா சூறாவளியால் கண்டியில் 241 பேர் உயிரிழப்பு டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகள் காரணமாக கண்டி மாவட்டத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 68 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.இந்த அனர்த்தம் காரணமாக 114 பேர் காயமடைந்துள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.இந்தப் பேரிடர் காரணமாக, 1959 வீடுகள் முழுமையாகவும், 16,565 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்தன. இதன் விளைவாக, 55,804 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து எண்பத்தோராயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்கள் அவர்களது உறவினர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய திரு. ரணவீர, கண்டி மாவட்டத்தில் 23,244 குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளிலும், மேலும் 2,089 குடும்பங்கள் 95 பாதுகாப்பு மையங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.மேலும், இந்த குழு கூட்டத்தில், 323 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட 1791 குழந்தைகள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தால் தாய்மார்களை இழந்த 7 குழந்தைகளும், தந்தையர்களை இழந்த 32 குழந்தைகளும், தாய், தந்தையர் இருவரையும் இழந்த 3 குழந்தைகளும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement