• May 17 2026

வடக்கு மாகாணத்தில் நாளை காலை வரை மழை தொடரும்; கரையோர கடல் கொந்தளிக்கும் - மீனவர்கள் கடலுக்குச் செல்லாதீர்கள்!

shanu / Jan 10th 2026, 5:56 pm
image

வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது. இதனால் கரையோர கடல் கொந்தளிப்புடன் காணப்படும். ஆகையால் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். 


அவரால் இன்று (10)  பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 


இது இன்று முற்பகல் 11.40 மணியளவில் முல்லைத்தீவுக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடையில் சாளை ஊடாக நிலப்பகுதிக்குள் நுழைந்து தற்போது இரணைமடுக் குளப்பகுதியை மையம் கொண்டுள்ளது.


இந்த சாளைப் பகுதி புவியியல் ரீதியாகவும் காலநிலையியல் ரீதியாகவும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய பகுதி. அண்மித்த காலங்களில் குறிப்பாக கடந்த 2000ம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் உருவாகிய பல காற்றுச் சுழற்சிகள்  இந்த பகுதியினூடகவே வட மாகாணத்தினுள் பிரவேசித்துள்ளன.


இது இன்று மாலை அல்லது இரவு வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மிதமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது. மிதமான மழை கிடைத்தாலும் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. இது ஒரு சில தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்க காரணமாக அமையக்கூடும்.


வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். அதே வேளை  நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் போது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் நாளை காலை வரை மழை தொடரும்; கரையோர கடல் கொந்தளிக்கும் - மீனவர்கள் கடலுக்குச் செல்லாதீர்கள் வங்காள விரிகுடாவில் காணப்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வடக்கு மாகாணத்தின் மையத்தில் உள்ளது. இதனால் கரையோர கடல் கொந்தளிப்புடன் காணப்படும். ஆகையால் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரால் இன்று (10)  பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது இன்று முற்பகல் 11.40 மணியளவில் முல்லைத்தீவுக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடையில் சாளை ஊடாக நிலப்பகுதிக்குள் நுழைந்து தற்போது இரணைமடுக் குளப்பகுதியை மையம் கொண்டுள்ளது.இந்த சாளைப் பகுதி புவியியல் ரீதியாகவும் காலநிலையியல் ரீதியாகவும் கூர்ந்து அவதானிக்க வேண்டிய பகுதி. அண்மித்த காலங்களில் குறிப்பாக கடந்த 2000ம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் உருவாகிய பல காற்றுச் சுழற்சிகள்  இந்த பகுதியினூடகவே வட மாகாணத்தினுள் பிரவேசித்துள்ளன.இது இன்று மாலை அல்லது இரவு வலைப்பாட்டுக்கும் அந்தோனியார்புரத்துக்கும் இடையில் மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் தற்போது வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மிதமான மழை நாளை காலை வரை தொடரும் வாய்ப்புள்ளது. மிதமான மழை கிடைத்தாலும் தொடர்ச்சியாக மழை கிடைத்து வருகின்றது. இது ஒரு சில தாழ்நிலப் பகுதிகளில் நீர் தேங்க காரணமாக அமையக்கூடும்.வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் தொடர்ந்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.வடக்கு மாகாணத்தின் உள்நிலப்பகுதிகளில் காற்றின் வேகம் சற்று அதிகமாக காணப்படும். அதே வேளை  நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மீண்டும் கடற்பகுதிக்குள் செல்லும் போது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement