• May 19 2026

தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்! குவிக்கப்பட்ட பொலிஸார்

Chithra / Dec 21st 2025, 10:48 am
image

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்று காலை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளனர். 

தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா இன்று புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளது.  

அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக "இதொரு சட்டவிரோதமான விகாரை" என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும், விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், காணி உரிமையாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை உருவாகியுள்ளது. 

fǑ?Q9%˶ "ɿ;Ẏ'^1 34j]3U{U]jPHIUcR=

தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் குவிக்கப்பட்ட பொலிஸார் தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்று காலை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா இன்று புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளது.  அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக "இதொரு சட்டவிரோதமான விகாரை" என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும், விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், காணி உரிமையாளர்கள், மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை உருவாகியுள்ளது. fǑQ9%˶ "ɿ;Ẏ'^1 34j]3U{U]jPHIUcR=

Advertisement

Advertisement

Advertisement