மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் செவ்வாய்கிழமை(13.10.2026) மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பும் சிறைச்சாலைக்கான காணி விடையங்கள் தொடர்பில் விரிவாக எடுத்தியம்பியதோடு, அப்பிரதேசத்தின் பல முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தினார்.
அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பு மற்றும் சிறைச்சாலைக்கான காணி ஒதுக்கீடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறைக்குத் தீர்வாக, அருகில் உள்ள சிறைச்சாலையை வேறுஇடத்திற்கு மாற்றுவதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் எடுத்தியம்பினார்.
அம்தோடு கடந்த 14.01.2026 அன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் உள்ள சிறைச்சாலையை பிறிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கு அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கடந்த 21.01.2026 அன்று சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிப்பை நோக்காக கொண்டு சிறைச்சாலையை பிறிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் நீதி அமைச்சரிடம் கலந்துரையாடி அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 20.05.2026 அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மட்டக்களப்பு வைத்தியசாலை விஸ்தரிப்புக்காக சிறைச்சாலையை மாற்றுவதோடு, மக்களின் எதிர்ப்பை மதித்து மாந்தீவு பகுதியில் சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு நிலைய திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 29.09.2026 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சிறைச்சாலையை புதிய காணிக்கு மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டை 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்குத் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் கோரிக்கைக்கு அமைய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிரைலயில் இக்கூட்டத்தில் வின்சன்ட் தேசியப் பாடசாலைக்கு முன்னால் உள்ள நடைபாதை மற்றும் வளைவு சந்தி புனரமைப்பு, மாந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகர சபை எல்லை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ஹபீப் இர்பான், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை ஆணையாளர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பல்வேறு துறைசார் அரச உயர் அதிகாரிகள், நிறுவனப் பிரதிநிதிகள், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விஸ்தரிப்புக்கு சிறைச்சாலையை இடமாற்றத் திட்டம்; 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மண்முனை வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் செவ்வாய்கிழமை(13.10.2026) மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.இதில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பும் சிறைச்சாலைக்கான காணி விடையங்கள் தொடர்பில் விரிவாக எடுத்தியம்பியதோடு, அப்பிரதேசத்தின் பல முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தினார்.அந்த வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விஸ்தரிப்பு மற்றும் சிறைச்சாலைக்கான காணி ஒதுக்கீடு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறைக்குத் தீர்வாக, அருகில் உள்ள சிறைச்சாலையை வேறுஇடத்திற்கு மாற்றுவதற்கான காணி ஒதுக்கீடு மற்றும் அதன் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் எடுத்தியம்பினார்.அம்தோடு கடந்த 14.01.2026 அன்று நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அண்மையில் உள்ள சிறைச்சாலையை பிறிதொரு இடத்துக்கு மாற்றுவதற்கு அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு அனுப்புவதற்கு தீர்மானம் எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.கடந்த 21.01.2026 அன்று சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை விஸ்தரிப்பை நோக்காக கொண்டு சிறைச்சாலையை பிறிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கு சுகாதார அமைச்சர் அவர்கள் நீதி அமைச்சரிடம் கலந்துரையாடி அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.கடந்த 20.05.2026 அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மட்டக்களப்பு வைத்தியசாலை விஸ்தரிப்புக்காக சிறைச்சாலையை மாற்றுவதோடு, மக்களின் எதிர்ப்பை மதித்து மாந்தீவு பகுதியில் சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு நிலைய திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இதன் தொடர்ச்சியாக, கடந்த 29.09.2026 அன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சிறைச்சாலையை புதிய காணிக்கு மாற்றுவதற்கான நிதி ஒதுக்கீட்டை 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்குத் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களின் கோரிக்கைக்கு அமைய தீர்மானிக்கப்பட்டிருந்தது.இந்நிரைலயில் இக்கூட்டத்தில் வின்சன்ட் தேசியப் பாடசாலைக்கு முன்னால் உள்ள நடைபாதை மற்றும் வளைவு சந்தி புனரமைப்பு, மாந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி, மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகர சபை எல்லை தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், ஹபீப் இர்பான், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர், மாநகர சபை ஆணையாளர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி உட்பட பல்வேறு துறைசார் அரச உயர் அதிகாரிகள், நிறுவனப் பிரதிநிதிகள், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.