• May 17 2026

வெள்ளநீர் கடலுக்கு செல்ல உடப்பு முகத்துவாரம் திறப்பு!

Chithra / May 17th 2026, 11:57 am
image

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் தேக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புத்தளம் உடப்பு பகுதியிலுள்ள முகத்துவாரம் (அறுவாய்) நேற்று (16) மாலை கடலுக்கு திறந்து விடப்பட்டது.


முந்தல் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


முகத்துவாரம் திறக்கப்பட்டதன் மூலம் புத்தளம் பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீர் மற்றும் பல குளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் கடலுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து, வெள்ள அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும், முந்தல் பகுதிகளில் அமைந்துள்ள இறால் பண்ணைகளுக்கும் இந்த நடவடிக்கை பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. 


வெள்ளநீர் தேக்கம் காரணமாக பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவிய நிலையில், முகத்துவாரம் திறக்கப்பட்டதன் மூலம் பண்ணையாளர்கள் தங்களின் இறால் வளர்ப்பு பண்ணைகளை பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளநீர் கடலுக்கு செல்ல உடப்பு முகத்துவாரம் திறப்பு நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் தேக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புத்தளம் உடப்பு பகுதியிலுள்ள முகத்துவாரம் (அறுவாய்) நேற்று (16) மாலை கடலுக்கு திறந்து விடப்பட்டது.முந்தல் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.முகத்துவாரம் திறக்கப்பட்டதன் மூலம் புத்தளம் பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீர் மற்றும் பல குளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர் கடலுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நீர்மட்டம் குறைந்து, வெள்ள அபாயம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், முந்தல் பகுதிகளில் அமைந்துள்ள இறால் பண்ணைகளுக்கும் இந்த நடவடிக்கை பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. வெள்ளநீர் தேக்கம் காரணமாக பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவிய நிலையில், முகத்துவாரம் திறக்கப்பட்டதன் மூலம் பண்ணையாளர்கள் தங்களின் இறால் வளர்ப்பு பண்ணைகளை பாதுகாத்துக் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement