• Sep 02 2026

திருகோணமலை நகர அபிவிருத்திக்கு புதிய திட்டங்கள்!

Aathira / Sep 2nd 2026, 12:03 pm
image

நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில், 2027ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு குறித்த நகரங்களின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அடையாளம் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதற்கமைய, திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (31) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில், திருகோணமலை மாநகர சபை, பிரதேச சபைகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடலின்போது, திருகோணமலை நகரத்தின் அபிவிருத்திக்கான முன்னுரிமைத் திட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகளால் பல்வேறு கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

திருகோணமலை நகரத்தின் அடுத்த 10 ஆண்டுகால அபிவிருத்திக்கு தேவையான திட்டங்களை அடையாளம் காணும் வகையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திருகோணமலை நகர அபிவிருத்திக்கு புதிய திட்டங்கள் நகர அபிவிருத்தி அமைச்சின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக, நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 16 நகரங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் திருகோணமலை மற்றும் கந்தளாய் நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில், 2027ஆம் ஆண்டு முதல் அடுத்த 10 ஆண்டுகளுக்கு குறித்த நகரங்களின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் அடையாளம் காணப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.இதற்கமைய, திருகோணமலை நகரத்திற்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகளை அடையாளம் காணும் விசேட கலந்துரையாடல் நேற்று முன்தினம் (31) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.இதில், திருகோணமலை மாநகர சபை, பிரதேச சபைகள் உள்ளிட்ட நகர அபிவிருத்தியுடன் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரசபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.கலந்துரையாடலின்போது, திருகோணமலை நகரத்தின் அபிவிருத்திக்கான முன்னுரிமைத் திட்டங்கள், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதிநிதிகளால் பல்வேறு கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.திருகோணமலை நகரத்தின் அடுத்த 10 ஆண்டுகால அபிவிருத்திக்கு தேவையான திட்டங்களை அடையாளம் காணும் வகையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement