• Apr 27 2026

ஒட்டுசுட்டானில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்!

shanu / Mar 21st 2026, 9:41 pm
image

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் ஒன்றான இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்  ஒன்று ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியுள்ளது. 


முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னச்சாளம்பன் கிராமத்தில் இந்த இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டமானது 18.03.2026 ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது


இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கம்பகா மாவட்டத்தில் இருந்து வருகைதந்த இளைஞர் யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு 18..03.2026 அன்று ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.


முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் அ.தவேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.


கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 சிங்கள இளைஞர்கள் வருகைதந்ததுடன் அவர்கள் இங்குள்ள தமிழ் இளைஞர்களுடன் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சகோதர உறவுகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் இன மத மொழி வேறுபாடின்றி   நல்லுறவை வளர்க்கும் வகையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகைதந்த இளைஞர்கள் தொடர்சியாக ஆறு நாட்கள் சின்னச்சாளம்பன் கிராமத்தில் உள்ள இளைஞர்களின் வீடுகளில் தங்கி நின்று இங்கு பல்வேறு செயற்திட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.


குறித்த ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் கே.டி.சி.காமினி ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, ஒட்டுசுட்டான் கிராம அலுவலர், இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதிகள்,மதகுருக்கள், கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகைதந்த இளைஞர்கள் மற்றும் அவர்களை பொறுப்பெடுத்த கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இவர்கள் இங்கிருந்து சென்றதும் இங்குள்ள இளைஞர்கள் 25 பேர் கம்பஹா மாவட்டம் சென்று அவர்களின் வீடுகளில் ஆறு நாட்கள் தரித்து நின்று அங்குள்ள கலை கலாச்சார விளுமியங்களுடன் கூடிய நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் இன ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இளைஞர்கள் மத்தியில் இந்த செயற்ப்பாட்டினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


ஒட்டுசுட்டானில் தேசிய இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களில் ஒன்றான இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம்  ஒன்று ஒட்டுசுட்டானில் ஆரம்பமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சின்னச்சாளம்பன் கிராமத்தில் இந்த இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டமானது 18.03.2026 ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றதுஇந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக கம்பகா மாவட்டத்தில் இருந்து வருகைதந்த இளைஞர் யுவதிகளை வரவேற்கும் நிகழ்வு 18.03.2026 அன்று ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்  மன்றத்தின் முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பணிப்பாளர் அ.தவேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.கம்பஹா மாவட்டத்திலிருந்து 25 சிங்கள இளைஞர்கள் வருகைதந்ததுடன் அவர்கள் இங்குள்ள தமிழ் இளைஞர்களுடன் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சகோதர உறவுகளை வளர்த்தெடுக்கும் நோக்கில் இன மத மொழி வேறுபாடின்றி   நல்லுறவை வளர்க்கும் வகையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகைதந்த இளைஞர்கள் தொடர்சியாக ஆறு நாட்கள் சின்னச்சாளம்பன் கிராமத்தில் உள்ள இளைஞர்களின் வீடுகளில் தங்கி நின்று இங்கு பல்வேறு செயற்திட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.குறித்த ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாண பணிப்பாளர் கே.டி.சி.காமினி ஒட்டுசுட்டான் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, ஒட்டுசுட்டான் கிராம அலுவலர், இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதிகள்,மதகுருக்கள், கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகைதந்த இளைஞர்கள் மற்றும் அவர்களை பொறுப்பெடுத்த கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக இவர்கள் இங்கிருந்து சென்றதும் இங்குள்ள இளைஞர்கள் 25 பேர் கம்பஹா மாவட்டம் சென்று அவர்களின் வீடுகளில் ஆறு நாட்கள் தரித்து நின்று அங்குள்ள கலை கலாச்சார விளுமியங்களுடன் கூடிய நிகழ்வுகளில் ஈடுபடவுள்ளனர் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் இன ஒற்றுமை நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இளைஞர்கள் மத்தியில் இந்த செயற்ப்பாட்டினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement