சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக, X தளத்தில் உள்ள இஸ்ரேல் அரசின் அரபு மொழிக் கணக்கு தெரிவித்துள்ளது.
டிரம்பின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகவும், இரு நாடுகளுக்கும் கவலை அளிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணை நிலுவையில் உள்ள நிலையில் இந்தப் பயணம் இடம்பெறுகிறது. காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளின்போது மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக ICC 2024 நவம்பரில் கைது வாரண்டுகளைப் பிறப்பித்தது.
எனினும், இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், ICC-க்கு தங்கள் மீது அதிகார வரம்பு இல்லை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த வெள்ளை மாளிகைப் பயணம், டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரியில் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர், நெதன்யாகு அவரைச் சந்திக்கும் ஏழாவது முறையாகும்.
இது, டிரம்ப் பதவியேற்ற பின்னர் எந்தவொரு உலகத் தலைவரும் அவரைச் சந்தித்துள்ள எண்ணிக்கையை விட அதிகமானதாகக் கூறப்படுகிறது
கைது எச்சரிக்கைக்கு மத்தியில் அமெரிக்கா பறந்த நெதன்யாகு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பதற்காக நெதன்யாகு வாஷிங்டன் டி.சி.க்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக, X தளத்தில் உள்ள இஸ்ரேல் அரசின் அரபு மொழிக் கணக்கு தெரிவித்துள்ளது.டிரம்பின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதாகவும், இரு நாடுகளுக்கும் கவலை அளிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நெதன்யாகு மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது ஆணை நிலுவையில் உள்ள நிலையில் இந்தப் பயணம் இடம்பெறுகிறது. காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளின்போது மனிதகுலத்திற்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக ICC 2024 நவம்பரில் கைது வாரண்டுகளைப் பிறப்பித்தது.எனினும், இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதுடன், ICC-க்கு தங்கள் மீது அதிகார வரம்பு இல்லை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இந்த வெள்ளை மாளிகைப் பயணம், டொனால்ட் டிரம்ப் 2025 ஜனவரியில் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர், நெதன்யாகு அவரைச் சந்திக்கும் ஏழாவது முறையாகும். இது, டிரம்ப் பதவியேற்ற பின்னர் எந்தவொரு உலகத் தலைவரும் அவரைச் சந்தித்துள்ள எண்ணிக்கையை விட அதிகமானதாகக் கூறப்படுகிறது