• Jul 27 2026

எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லை; தனித்தே போட்டி! – பொதுஜன பெரமுன அறிவிப்பு

Chithra / Jul 27th 2026, 10:01 am
image


தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது தேசியக் கட்சியுடனோ கூட்டணியமைக்க போவதில்லை. தனித்தே போட்டியிடுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.


கொழும்பில்  நேற்று  நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடை பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவை காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 


நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதற்கு அமையவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும் ஒன்றிணைந்துள்ளோம். இது அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில் கட்சி என்ற அடிப்படையில கொள்கை வேறுபாடு காணப்படுகிறது.


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சிப் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கை மீது நம்பிக்கை கிடையாது என்றார்.

 


எந்த தேசியக் கட்சியுடனும் கூட்டணி இல்லை; தனித்தே போட்டி – பொதுஜன பெரமுன அறிவிப்பு தேசிய தேர்தல் ஒன்று இடம்பெறும் போது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது தேசியக் கட்சியுடனோ கூட்டணியமைக்க போவதில்லை. தனித்தே போட்டியிடுவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.கொழும்பில்  நேற்று  நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடை பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவை காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதற்கு அமையவே தற்போது சகல எதிர்க்கட்சிகளுடனும் ஒன்றிணைந்துள்ளோம். இது அரசியல் கூட்டணியல்ல. ஏனெனில் கட்சி என்ற அடிப்படையில கொள்கை வேறுபாடு காணப்படுகிறது.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சிப் பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கை மீது நம்பிக்கை கிடையாது என்றார். 

Advertisement

Advertisement

Advertisement